ஒரு மாணவனை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அஸிசான் மானாப் இன்று சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அஸிசான் இன்று காலை மணி 8.30 க்கு நீதிமன்றம் வந்து சேர்ந்தார்.
சுமார் 300 ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கத்தின் (என்யுடிபி) பிரதிநிதிகளும் நீதிமன்றத்தில் இருந்ததாக ஹரியான் மெட்ரோ கூறுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவனின் தகாத செயல்களுக்காக அஸிசான் அவனைத் தண்டித்ததாகக் கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் செக்சன் 323 இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரிம2,000 அபராதத்தை எதிர்கொண்டிருப்பார்.
நீதி மன்றத்தின் இந்த நல்லத் தீர்ப்பை நாமெல்லோரும் வரவேற்போம். உயர்ந்த இடத்திலிருக்கும் ஆசிரியர் அந்த மாணவனின் எதிர்க் காலத்தைக் கவனத்தில் கொண்டு அந்த மாணவனைக் கண்டித்தது தப்பில்லை. “மாதா பிதா குரு தெய்வம்”. பெற்றோர்கள் செய்ய வேண்டிய வேலையை அவர்ச் செய்துள்ளார். இதுவொரு நல்ல ஆசிரியரின் செயல். மற்ற ஆசரியர்களுக்கெல்லாம் நல்ல முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார். வருங்ககாலத்தில் குறிப்பாக இடைநிலைப் பள்ளிகளில் ஒழுங்காகப் படிக்காமல் தகாத செயல்களை செய்யும் நம் மாணவர்களுக்கு இதுவொரு நல்லப் பாடமாக அமைய வேண்டும். பொதுவாக நம் மாணவர்களின் செயல்கள் இடை நிலைப் பள்ளிகளில் மோசமாகவுள்ளது நம் பிள்ளைகளின் கலவி வளர்ச்சியில் கொஞ்சமும் அக்கறையில்லாத நம்மில் பலப் பெற்றோர்களுக்கும் இதுவொரு நல்லப் பாடமாகவும் அமைய வேண்டும். ஆசிரியரின் கடுமையானக் கண்டிப்பு இருந்தால்தால்தான் மாணவனின் எதிர்காலமும் நன்றாகயிருக்கும். ஆக இந்த நீதி மன்றத் தீர்ப்பை நாமெல்லோரும் வரவேற்போம்..
நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆசிரியரைச் சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் மலாய் ஆசிரியர்கள். தப்பில்லை! மாணவன் தமிழனாக இருந்தால் அவன் பெயர் இந்நேரம் நாறிப் போயிருக்கும்! மலாய் மாணவனாகவும் இருக்க வாய்ப்பில்லை. அவன் பெயரையும் நாறடித்திருப்பார்கள்! ஒரு மலாய் ஆசிரியர் பக்கத்தில் பெரும்பாலும் மலாய் ஆசிரியர்கள் என்றால்……..?