திரெங்கானு பள்ளிவாசல்களில் குற்றச்செயல்களைத் தடுக்க சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு

திரெங்கானு  பள்ளிவாசல்கள்  ஒவ்வொன்றிலும்  “போலீஸ்  ராக்கான்  மஸ்ஜிட்  எனப்படும்   பாதுகாப்புப்  பிரிவு  அமைக்கப்படும்.  அது   போலீஸ்   ஒத்துழைப்புடன்  பள்ளிவாசல்களில்   குற்றச்செயல்கள்   நிகழ்வதைத்   தடுக்கும்.

பள்ளிவாசல்களில்   கண்காணிப்பு   கேமராக்களும்   பாதுகாவலர்களும்  இருந்தாலும்    இதுவும்  சேர்ந்து   பாதுகாப்பை   வலுப்படுத்தும்    என  மாநில,   தொடர்பு,  பல்லூடக,  சிறப்புப்  பணிகள்  குழுத்   தலைவரான  கஜாலி   தயிப்    கூறினார்.

“இறைவனைத்   தொழுவதற்குப்  பள்ளிவாசல்களுக்கு       வரவேண்டும்.  ஆனால்,  திருடர்கள்    தொழ  வருபவர்களின்   பொருள்களைக்  கொள்ளையிட   வருவதை  நினைக்கையில்   வருத்தமாக   இருக்கிறது”,  என்றாரவர்.

அண்மையில்   கோலா  நெருஸ்  பள்ளிசல்  ஒன்றில்   மகளிர்   தொழுகை   நடத்தும்   இடத்தில்   ஒரு   திருட்டுச்   சம்பவம்   நிகழ்ந்ததை   அடுத்து  பாதுகாப்புப்    பிரிவுகளை    அமைக்கும்    நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.