ஜனவரி 3-இல் நடைபெறும் பாரிசான் நேசனல் உச்சமன்றச் “சிறப்புக் கூட்டம்” தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கும் என்று பெரித்தான் ஹரியான் கூறியுள்ளது.
பொதுத் தேர்தல் 2018 முதல் காலாண்டில் நடைபெறலாம் என ஒரு வட்டாரம் அந்நாளேட்டிடம் தெரிவித்துள்ளது.
பிஎன் தலைவர்கள் பலரும் புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறியுள்ளனர்.
தீவகற்ப பிஎன் தலைவர்கள் தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நிலவும் சர்ச்சைகளை அக்கூட்டத்தில் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரவாக்கிலும் அதே போன்ற பிரச்னை நிலவுகிறது. பிஎன் பங்காளிக் கட்சிகளும் பிஎன் -தோழமைக் கட்சிகளும் தொகுதிகள் விசயத்தில் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கின்றன.
மலேசியாவின் மற்ற மாநிலங்கள்போல் அல்லாது சரவாக்கில் பிஎன் பங்காளிக்கட்சிகளைச் சேராதவர்களும் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.