ஜைட்: என் கருத்துகள் அபாயகரமானவை எனக் காண்பிக்க முயல்கிறது அரசாங்கம்

தம்முடைய     Assalamualaikum (May Peace Be Upon You): Observations on the Islamisation of Malaysia நூலுக்கு  உள்துறை  அமைச்சு   தடை  விதித்திருப்பது  குறித்துக்  கருத்துரைத்த   முன்னாள்  சட்ட   அமைச்சர்  ஜைட்   இப்ராகிம்,  அது தம்மை   “விரும்பத்தகாதவராகவும்”   தம்முடைய   கருத்துகளை  “அபாயகரமானவையாகவும்”   சித்திரிக்கும்    முயற்சி  என்று  நினைக்கிறார்.

“அது  அர்த்தமற்றது.  இஸ்லாமியமயம்   பற்றிப்   பேசுவது  இஸ்லாம்  பற்றிப்  பேசுவதல்ல.  அது  ஒரு  பொதுக்கொள்கை.  அது  குறித்து   யாரும்  பேசலாம்.  கருத்துரைக்கலாம்.

“இந்த   அரசாங்கம்  முஸ்லிம்கள்   சுயமாக  சிந்திப்பதை   விரும்புவதில்லை.  முஸ்லிம்கள்  கண்மூடித்தனமாக   அவர்களைப்  பின்பற்ற   வேண்டும்   என்று   விரும்புகிறார்கள்”,  என  ஜைட்    மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

2015-இல்   வெளியிடப்பட்ட   அவருடைய  நூலுக்குத்    தடை  விதிக்கப்பட்டிருப்பதாக  டிசம்பர்   19-இல்   கூட்டரசு   அரசாங்கத்தின்  அரசிதழில்  அறிவிக்கப்பட்டிருந்தது.