ஆண்டின் முற்பாதியில் கிளந்தானுக்கும் பெர்லிசுக்கும் அன்னிய நேரடி முதலீடு(எப்டிஐ) என்று எதுவும் வரவில்லை என்கிறது அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சு(மிட்டி).
என்றாலும் பெர்லிஸ் எப்படியோ உள்நாட்டு வட்டாரங்களிலிருந்து ரிம525 மில்லியன் முதலீட்டைப் பெற்றது. கிளந்தானால் ரிம4.2மில்லியன் முதலீட்டைத்தான் பெற முடிந்தது.
அந்த வகையில் மிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டைப் பெற்ற மாநிலங்களின் வரிசையில் கிளந்தானுக்குத்தான் கடைசி இடம்.
நிறைய முதலீட்டைப் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் பினாங்கு இருக்கிறது. மிட்டி அங்கீகாரத்துடன் ரிம7.7 பில்லியனை அது முதலீடுகளாகப் பெற்றது. இதில் ரிம6.2பில்லியன் அன்னிய நாடுகளின் முதலீடு.