சாபாவில்தான் குடியுரிமையில்லாக் குழந்தைகள் அல்லது இளம் சிறார்கள் அதிகம் என உள்துறை அமைச்சு கூறுகிறது.
சாபாவில் 21வயதுக்குக் குறைந்தவர்களில் 23,154 பேர் நாடற்றவர்கள் என்று தேசிய பதிவுத்துறை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இவ்வளவுக்கும் இவர்களின் பெற்றோரில் ஒருவர் மலேசியராக இருப்பார்.
அக்டோபர் 13வரையிலான கணக்கெடுப்பின்படி நாட்டில் 21வயதுக்கு உட்பட்டவர்களில் 43,445 பேர் நாடற்றவர்களாக உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் சாபாவில் உள்ளனர்.
இது மலேசிய பெற்றோருக்குப் பிறந்தும் “குடியுரிமை தகுதியற்றிருக்கும்” குழந்தைகளின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள விரும்பிய அலோர் காஜா எம்பி கோ நை குவோங்குக்கு உள்துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்.
நாடற்ற குழந்தைகளை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது பெரிய மாநிலம் சிலாங்கூர்(3,737). அதற்கடுத்து ஜோகூர்(2,603), கோலாலும்பூர்(2,197), சரவாக்(2,169).