வான் ஜுனாய்டிக்கு விளக்கமளிக்க வேண்டும் பினாங்கு எக்ஸ்கோ

பினாங்கு   ஆட்சிக்குழு   உறுப்பினர்   செள  கொன்  இயோவ்,   அத்தீவின்  தெற்குக்  கடலோரத்தில்   மாநில    அரசு   மேற்கொள்ளும்   நிலமீட்புத்   திட்டம்  குறித்து  இயற்கைவள,  சுற்றுச்சூழல்   அமைச்சுக்குக்  கடிதம்  வாயிலாக  விளக்கமளிக்க   வேண்டும்    என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்திட்டம்   சட்டவிரோதமானது   என்று  அமைச்சர்    வான்  ஜுனாய்டி   துவாங்கு   ஜப்பார்   கூறியதை  செள  மறுக்கிறார்   என்பதால்  அவர்தான்   ஏன்  அத்திட்டம்     சட்டவிரோதமானதல்ல   என்பதை  விளக்க  வேண்டும்  என   அம்னோ  புலாவ்  பெத்தோங்   சட்டமன்ற   உறுப்பினர்    முகம்மட்  பாரிட்  சாஆட்   கூறினார்.

“தெற்குக்  கடலோரம்   பெர்மாத்தாங்  டாமார்  லாவுட்டில்   திட்டமிடப்பட்டிருக்கும்   மிகப்  பெரிய  நில  மீட்புத்   திட்டத்தை  விளக்கி     செள      அமைச்சருக்குக்  கடிதம்   எழுத  வேண்டும்    என்று   அறிவுறுத்த   விரும்புகிறேன்.

“ஒரு  எக்ஸ்கோவான     அவர்   அமைச்சர்  வந்து   சந்தித்தால்   நிலமீட்புத்   திட்டம்  குறித்து   தகவல்   அளிப்பதாக  இறுமாப்புடன்    கூறக்  கூடாது.

“செள  ஒரு  எக்ஸ்கோதான்  முதலமைச்சர்   அல்ல   என்பதை   உணர   வேண்டும்.

“ஒருவேளை   அடுத்த   தவணை   அவர்   முதலமைச்சரானால்    அவர்  அமைச்சரை   கொம்டார்   28வது  மாடிக்கு   அழைத்து  இருவரும்  பழைய   நண்பர்கள்   என்பதால்  காப்பி  அருந்திக்கொண்டே  பேசலாம்”,  என்றாரவர்.

பினாங்கு   மாநில    டிஏபி    தலைவரான   செள,  நடப்பு   முதலமைச்சரான  லிம்  குவான்  எங்    அவர்மீதான  ஊழல்  குற்றச்சாட்டு  வழக்கில்    சிறை  செல்ல  நேர்ந்தால்   அடுத்த   சிஎம்  ஆகலாம்   என்று  கூறப்படுகிறது.