14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு பேரழிவை எதிர்நோக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஹ்மாட் சப்ரி சிக் கூறினார்.
பெர்சத்து, பிகேஆர், டிஏபி மற்றும் அமானாவின் கூட்டணியிலான பக்காத்தான் ஹராப்பானை வழிநடத்த சரியான தலைமைத்துவம் இல்லாததால், அந்த எதிர்க்கட்சி கூட்டணி உறுதியற்ற நிலையில் உள்ளது என்று அவர் சொன்னார்.
“……..பதவி போராட்டம் நிச்சயம் நடக்கும், பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்க, டாக்டர் மகாதீர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும்,” என்றார் அவர்.
இன்று, பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீரையும் துணைப் பிரதமர் வேட்பாளராக டாக்டர் வான் அஷிசாவையும் ஹராப்பான் அறிவித்தது பற்றி அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டையும் இன்று ஹராப்பான் அறிவித்தது, பெர்சத்து 52 இடங்கள், பிகேஆர் 51 இடங்கள், டிஏபி 35 இடங்கள் மற்றும் அமானா 27 இடங்கள்.
-பெர்னாமா
இப்ப அம்னோ வழி நடத்தலில் நாடு நாசமாகி வருவதால் தானே, பக்காத்தான் தலைத்தூக்குது. இது இயற்கை, நாட்டை காப்பாத்த முதலில் பொருட்களின் விலையை இறக்கி, மக்களின் ஊதியத்தை பெருக்குங்கடா மடையா? நாட்டிலே கத்திரிக்கா கிலோ 9 வெள்ளி விக்குது இது ஒரு விவசாய அமைச்சர் நாயிக்கு அதை கவனிக்க முடியல அரசியல் பேசுது.
https://youtu.be/7kDWSjHpTvU
subscribe our channel
எமது தமிழ்மலேசியா தொலைக்காட்சிக்கு உங்கள் ஆதரவை எதிர் பார்க்கின்றோம். நன்றி
தம்பி சப்பரி கிச்சி இப்ப என்னா
நஜிப் ஆட்சியில் நாடு சொர்க்க
மாவாஇருக்கு,ஊழல் ஆறுதாதே
ஓடுது உங்களுக்கு செல்வ ஆறு
ஓடுது!