ஜிஇ14-ல் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், பக்காத்தான் ஹராப்பானைத் தலைமை தாங்கி வழிநடத்த மூத்த, வயதான அரசியல்வாதியான டாக்டர் மகாதிர் முகமட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று மஇகா பொருளாளர் சா.வேள்பாரி கேலி செய்துள்ளார்.
“பக்காத்தான் ஹராப்பான் வேறு எந்தத் தலைவரையும் தேர்ந்தெடுக்காமல், 93 வயதான ஒருவரை அவர்களது பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதை எண்ணி நான் வியந்து கொண்டிருக்கிறேன்,” என்று அவர் இன்று பெரித்தா டெய்லியிடம் தெரிவித்துள்ளார்.
“இதில் இன்னொரு அதிர்ச்சிக்குரிய விசயம் என்னவென்றால், லிம் கிட் சியாங் போன்ற மூத்த அரசியல்வாதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, நாட்டின் தற்போதைய மோசமான நிலை மகாதீரின் 22 ஆண்டுகால ஆட்சியில்தா தொடங்கியது என்று கிட் சியாங் கூறியிருந்தார்,” என்று வேள்பாரி சொன்னார்.
‘மிகவும் நெருக்குதலான’ ஒரு நிலையிலேயே, மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக ஹராப்பான் அறிவித்திருக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
பிகேஆரின் அனைத்து ஆதரவாளர்களையும், குறிப்பாக 1998-ல், அன்வார் இப்ராஹிம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கி போராடிய அனைவரையும் நினைத்து தான் அனுதாபப்படுவதாகவும் அவர் சொன்னார்.
“அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர், மேலும் இசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது, அன்வரை விடுதலை செய்ய நடந்த அவர்களது போராட்டங்கள் அனைத்தும் நேர விரயமானது என்று தோன்றுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலில், ஹராப்பான் வெற்றிபெற்றால், உலகின் மிக வயதானப் பிரதமரைக் கொண்ட நாடு மலேசியா என்ற சாதனையை நம் நாடு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இது உலக சாதனை. மகாதிரின் சிறந்த நண்பரான, 93 வயது ராபர்ட் முகாபே, அண்மையில்தான் ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஹராப்பானின் இளம் தலைவர்களுக்கு வேள்பாரி ஓர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
“உறுதியாக இருங்கள், எனக்குத் தெரிந்து மகாதீரின் மீது கொண்ட கருத்து வேறுபாட்டினாலேயே நீங்கள் எதிர்க்கட்சியில் இணைந்தீர்கள், குறிப்பாக மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பின்னர். இப்போது, அவர் உங்கள் தலைவர். வாழ்க்கை நிச்சயமாக சில சமயங்களில் கொடூரமானது,” என்று அவர் கூறியுள்ளார்.
இவனை எப்படி அடித்தாலும் தாங்குவான் போல தெரியுது என்ன செய்வது வந்த வழி அப்படி. தலை எப்படியோ அப்படிதான் வாழும் இருக்கும் போல தெரியுது. ஆம், முதலில் உங்களை பாருங்கள் அடுத்து உங்கள் கட்சிகளை பாருங்கள் உருப்படியாக உங்கள் கட்சிகாரர்கள் மக்களிடம் வாக்கு வேட்டை வாங்க முடியுமா என்று யோசித்து பாருங்கள். மக்கள் ரொம்பவும் கொதித்து போய் உள்ளனர் உங்கள் கட்சிகாரர்கள் மீது. ஒன்று சொல்லலாம் மக்கள் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போடுவர்கள்…. அனால் உங்களையும் உங்கள் கட்சிகாரர்களை நம்பியும் இல்லை. மஇகா பொருளாளர் சா.வேள்பாரி அவர்களே நீங்கள் கேலி செய்துளிர்கள் என்று செம்பருதி எழுதி உள்ளது. யார் யாரை பார்த்து கேலி செய்வது அட முட்டாள் பசங்கள….. சிரிப்பு வருது. ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து பார்த்து மஇகா பொருளாளர் சா.வேள்பாரி அறிக்கை விட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்…. காரணம் உன்னை எடுத்தாலே ஒரு திறன் இல்லாதவர் என உங்களை நம்பியும் உன் தந்தையை நம்பி பணம் போட்டு தெருவுக்கு வந்த குடும்பங்கள் கொஞ்சம் இல்லை ஐயா. வேண்டாம் நீங்கள் அடுதவரை பார்த்து அறிக்கை விட…உங்களுக்கு என்ன தகுதி இருக்கு…பேசாமல் இருந்தாலே போதும் ஐயா..நன்றி
அதே “வேறு வழியில்லாமல்” தான் உன்னையும் இன்னமும் மா இ கா வச்சிருக்கு ! இல்லாவிடில் உங்கள் குடும்பத்தின் மீது MAIKA HOLDINGS ஊழலால் அரச ஆணையம் வைக்கும் வரை போராட்டம் என்று தமிழ் மக்கள் என்றோ கொந்தளித்திருப்பார்கள் !
Zimbabwe President Rober Mugabe is 95 years old
தம்பி பாரி உங்க அப்பா தலைவராக இருந்த போது மகாதீர் இந்திய சமுதாய முன்னேற்றத்திற்காக வழங்கிய பங்கு பணமெல்லாம் அவரே பாக்கெட்டில் போட்டு மக்களுக்கு நாமம் போட்டாரு அந்த கதையெல்லாம் உனக்கும் தெரியும் தானே…? அப்படியிருக்க மகாதீரைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதியிருக்கு…ம.இ.கா. ஹொல்டிங்சில் நீ போட்ட ஆட்டம் யாரும் மறந்து விடவில்லை தம்பி.
hello Mr vel look at MIC first. Your father was 22 years in leadership position yet till now thousands of Indians still stateless.Also the Maika Holdings scandal. Don’t worry mic will kick out pact and go after the election.