ஹரபானில் தலைவர்களுக்குப் பஞ்சம் அதன் விளைவுதான் ‘மறுசுழற்சி வேட்பாளர்கள்’- அஸலினா

பக்கத்தான்  ஹரபானில்    தகுதியான    தலைவர்கள்  இல்லை   என்பதால்தான்     அது    பிரதமர்,  துணைப்  பிரதமர்   பதவிகளுக்கு  “மறுசுழற்சி”   வேட்பாளர்களையே   தேர்ந்தெடுத்துள்ளது.

இவ்வாறு   கூறிய   பிரதமர்துறை   அமைச்சர்   அஸலினா  ஒத்மான்  சைட்,   இது  அக்கட்சிக்கு   அதன்  இளம்    தலைவர்கள்மீது   நம்பிக்கை  இல்லை  என்பதையும்   அவர்களை   ஊக்குவிக்க  அது    விரும்பவில்லை   என்பதையும்  காண்பிப்பதாகக்  குறிப்பிட்டார்.

“நான்  பல  தடவை  கூறியிருக்கிறேன்,  பக்கத்தான்  ஹரபான்   ஒரு   மறுசுழற்சி  கட்சி   என்று.  அவர்களிடம்  தகுதியான   இளம்   தலைவர்கள்  பலர்   இருந்தாலும்  முன்பு   அம்னோவில்   இருந்தவர்களையே   திரும்பத்   திரும்பப்   பயன்படுத்திக்கொள்கிறார்கள்”,  என்றாரவர்.

இப்படி   நடக்க   இரண்டு  காரணங்கள்தான்  உண்டு.  ஒன்று    அவர்களிடம்  தகுதி  வாய்ந்த   தலைவர்கள்  இல்லை,      அல்லது   இருக்கும்   தலைவர்கள்மீது    நம்பிக்கை  இல்லை  என்றாரவர்.