மிதவாதப் போக்குகொண்ட முன்னாள் அரசு ஊழியர்களைக் கொண்ட குழுமம் 25(ஜி 25)-க்கு அதன் Breaking the Silence: Voices of Moderation – Islam in a Constitutional Democracy (மெளனம் உடைகிறது: மிதவாத குரல்கள்- அரசமைப்புப்படியான ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் நிலை) என்ற நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடுக்க கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
நீதிபதி கமாலுடின் முகம்மட் சைட் அந்த அனுமதியை அளித்தார்.
நீதிமுறை மேலாய்வுக்காக வழக்கு தொடுப்பதற்குமுன் அதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். விளையாட்டுத்தனமாகவோ வெறுமனே அலைக்கழிப்பதற்காகவோ வழக்கு தொடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே அவ்வாறு செய்யப்படுகிறது.
2015 டிசம்பரில் வெளியிடப்பட்ட அந்நூலுக்கு முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி முன்னுரை வழங்கியுள்ளார். வெளியிடப்பட்ட மாதமே நூலின் ஒரு பிரதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமும் வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு ஜூலை 27–இல் நூலுக்கு உள்துறை தடைவிதித்திருப்பதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது.