அஸ்மின் கோம்பாக் தொகுதியை மகாதிருக்கு விட்டுகொடுக்கத் தயார்

பிகேஆர்  துணைத்  தலைவர்   அஸ்மின்  அலி  அடுத்த   பொதுத்   தேர்தலில்   கோம்பாக்   தொகுதியை   பக்கத்தான்  ஹரபான்  பிரதமர்   வேட்பாளரான  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு   விட்டுக்கொடுக்க   முன்வந்தார்.

“பிகேஆர்   ஒத்துக்கொண்டால்  கோம்பாக்கை   மகாதிருக்கு   விட்டுக்கொடுக்கத்    தயராக   இருக்கிறேன்”,  என்றவர்  நேற்றிரவு  டிவிட்டரில்  கூறினார்.

2013   பொதுத்  தேர்தலில்   அஸ்மின்  4,734  வாக்குகள்  பெரும்பான்மையில்   வெற்றிபெற்ற  தொகுதி   கோம்பாக்.

நேற்று    மகாதிர்   அஸ்மினும்    பிரதமராவதற்குத்   தகுதியானவரே   என்று  கூறியிருந்தது   குறிப்பிடத்தக்கது.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை  ஹரபான்  கூட்டணி   டாக்டர்  மகாதிரை    அதன்   பிரதமர்  வேட்பாளராக    அறிவித்தது.

அந்த   அறிவிப்புக்குப்   பக்கத்தானிலேயே  சிலர்   எதிர்ப்புத்    தெரிவித்தனர். சிலாங்கூர்  பிகேஆரும்-  அஸ்மின்  சிலாங்கூர்  பிகேஆர்  தலைவர்-  அதை  எதிர்ப்பதாக   அறிக்கை  விடுத்தது.

ஆனால்,  நேற்று   அஸ்மின்,   மகாதிர்தான்  “சிறந்த  தேர்வு”   என்று  கூறியிருந்தார்.

மகாதிரைப்  பொருத்தவரை   14வது  பொதுத்  தேர்தலில்  குபாங்  பாஸு ,  லங்காவி    அல்லது  புத்ரா  ஜெயாவில்   போட்டியிடுவது   குறித்து    ஆலோசிப்பதாகக்  கூறினார்.