ஆசிரியர்களும் கல்வி அமைச்சு அதிகாரிகளும் எதிர்க்கட்சிகளில் பதவி வகித்தால் அவர்கள் பணி விலக வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக சீன நாளேடான குவோங் வா ஜிட் பாவ் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத்தைக் குறைகூறுவது அதற்குக் களங்கம் உண்டு பண்ணிவிடுகிறது என்பதால் அப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் பணிவிலக வேண்டும் எனக் கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட் கூறியதாக அச்செய்தி தெரிவித்தது.
“அவர்கள் பணிவிலகி கட்சியிலிருந்து கொண்டு பேசலாம், அரசாங்கத்தை எதிர்க்க விரும்பினால் பொதுத் தேர்தலில் போட்டியும் இடலாம்”, என்று அமைச்சர் சொன்னதாக அது குறிப்பிட்டது.
அப்படிப்பட்டவர்களைப் பணி விலக அமைச்சு பணிக்கும் என்றாரவர்.
“அரசாங்கப் பணியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சிகளில் சேர்வதையோ பதவி வகிப்பதையோ அனுமதிக்க முடியாது.
“ஆனால், ஆளும் கட்சிகளில் சேரலாம், பதவி வகிக்கலாம்”, என்றாரவர்.