கிளந்தான் பிகேஆர் 15 சட்டமன்ற இடங்களுக்குக் குறி

பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்  ஹரபான்   தனக்கு   15  சட்டமன்ற  இடங்களைக்  கொடுக்கும்   என  கிளந்தான்   பிகேஆர்   எதிர்பார்க்கிறது.

பல  நாடாளுமன்ற   இடங்களை  பெர்சத்துவுக்கு  விட்டுக்கொடுக்க   முன்வந்திருப்பதால்   தங்களுக்கு   ஏற்கனவே  போட்டியிட்ட  5  இடங்களைவிட  கூடுதலாக   கொடுக்கப்படுவது    நியாயமே  என்று   கிளந்தான்  பிகேஆர்   தலைவர்   அப்  அசிஸ்  அப்  காடிர்   கூறினார்.

“கிளந்தானில்  45  சட்டமன்ற   இடங்கள்   இருப்பதால்   ஹரபான்   இதற்கு  ஒப்புக்கொள்ளும்   என  எதிர்பார்க்கிறோம்”,  என்றவர்  இன்று   கோத்தா  பாருவில்   கூறினார்.

பாஸின்  கோட்டையாக   திகழும்   கிளந்தானில்   ஹரபான்     இட ஒதுக்கீட்டு  விவகாரத்துக்கு    இன்னும்  முடிவு  காணவில்லை.

கிளந்தானில்   போட்டியிடும்   பிகேஆர்   வேட்பாளர்கள்   நல்ல   பின்னணியைக்  கொண்டவர்களாவும்   மக்களுக்கு  நன்கு    அறிமுகமானவர்களாகவும்  இருப்பர்    என்றாரவர்.

கிளந்தானில்   பாஸிலிருந்து   பிரிந்து  வந்த   அமனா  கட்சியினரே   அதிகமான  இடங்களில்    போட்டியிடுவார்கள்   என   எதிர்பார்க்கப்படுகிறது.