தேசிய காரான புரோட்டோன்மீது கொண்ட மோகத்தால் பொதுப் போக்குவரத்தைப் புறக்கணித்தார் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றஞ்சாட்டியிருப்பதைக் கேட்டு டாக்டர் மகாதிர் முகம்மட் சிரித்தார்.
“இப்படிப்பட்ட பேச்சை அவர் கண்ணாடியைப் பார்த்துத்தான் பேச வேண்டும். வேறு யாரும் அதைக் கேட்க மாட்டார்கள்”, என மகாதிர் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2003-இல் பணி விலகியபோது நாட்டைச் சிறந்த நிலையில் வைத்துவிட்டுத்தான் விலகியதாக அவர் சொன்னார். அப்போதெல்லாம் புரோட்டோன் நிதி நிலை நல்லாவே இருந்தது. அரசாங்கம் ‘மூக்கை நுழைக்கத் தொடங்கியதும்’ எல்லாம் கெட்டது என்றார்.
நஜிப் இன்று கோலாலும்புரில் ஒரு நிகழ்வில் பேசியபோது ஒரு மனிதர் புரோட்டோன்மீது கொண்டிருந்த மோகத்தால் பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
அன்றைய பிரதமர் பொது போக்குவரத்துக்கு புறக்கணிக்கப்பட்டது உண்மையாக இருப்பினும் அது டெக்சி ஒட்டுனர்களுக்கு அன்று அது பாதகம் இல்லை. அன்று தினமும் மிகவும் உற்சாகமாக டெக்சி ஒட்டி தன் வருமானத்தையும் குடும்பத்தையும் நல்ல நிலையில் வைத்து கொண்டனர். அனால் இன்று டெக்சி ஒட்டுனர்கள் நிலை மிகவும் பரிதாபமாகவும் சோகமாகவும் இருகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் மிகவும் கடுமையான நிலையில் இருகின்றனர் தங்களின் வருமானத்தை பெறுவதற்கு. ஒரு நாள் வாடகை 50 ரிங்கிட், எரிபொருள் செலவு ஒருநாள் 30 ரிங்கிட், சாப்பாடு செலவு 20 ரிங்கிட். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வருமானம் 150 ரிங்கிட் இன்று. செலவு 100 ரிங்கிட் போக 50 ரிங்கிட் மிச்சம். அன்றைய பிரதமர் காலத்தில் 12 மணி நேரம் வேலைக்கு 250 ரிங்கிட் முதல் 300 ரிங்கிட் வருமானம் கிடைத்தது. அதுவும் அன்று டெக்சி மீட்டர் மிக குறைவாக இருந்தது. இன்று 3.00 ரிங்கிட் டெக்சி கதவை திறன்ததும். இருப்பினும் அன்றுபோல் இன்று வருமானதை பெறமுடியவில்லை அவர்களுக்கு. இன்று இலவச பேருந்து, உபர், கிராப் என வந்து விட்டது. பிரதமர் அவர்கள் இன்று மக்களோடு மக்களாக அதுவும் டெக்சி ஒடுனர்களின் நலனையும் கருதில் கொண்டு பார்க்கவேண்டும். இன்று கோலாலம்பூர் எடுத்து கொண்டால் அதிக ரயில் வண்டிகள் பார்க்கும் திசை எல்லாம் இருக்கின்றன. இதுவும் ஒரு டெக்சி ஒடுனர்களின் வருமானத்தை பாதிக்கவைத்து உள்ளது. நாட்டு வளர்சிக்கு மிகவும் அவசியம் ஒன்று இவை போன்ற திட்டங்கள். அனாலும் டெக்சி தொழிலையே நம்பி வாழும் அவர்களின் குறைகளை யாரிடம் எடுத்து வைப்பது. பிரதமர் எடுத்து வைக்கும் திட்டங்கள் அதிக நன்மையாயினும் டெக்சி ஒட்டுனர்களுக்கு மிகவும் சிரமத்தை கொடுகிறது. இந்த இலவச பொது போக்குவரத்துக்கு பேருந்துகளை நிறுத்தினால் டெக்சி ஒட்டுனர்களுக்கு கொஞ்சம் வருமானத்தை கொடுக்கும் என நினைக்கிறன். இந்த இலவச பேருந்து மூலம் அதிகம் நன்மை அடைபவர்கள் பங்களா தேசிகள், இந்தோனேசியர்கள். நன்றி