பிஎன்மீது ஏமாற்றமடைந்தும் அதன் தலைமைத்துவத்தை எதிர்க்கத் துணிவு இல்லாதவர்கள் பேசாமல் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“அப்படிப்பட்டவர்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என்கிறேன்.
“எங்களை ஆதரிப்பவர்கள் சென்று வாக்களிக்கட்டும்”, என அந்த பெர்சத்து உதவித் தலைவர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
இது குள்ளநரி தந்திரமாக அல்லவா தெரிகிறது!மக்கள் அனைவரும் ஓட்டு போடுவது அவரவர் உரிமை.அதனை யாரும் தடுக்க முயற்சி செய்வது சட்டப்படி குற்றமாகும்.
எதிர்கட்சிக்கு ஓட்டு போடாதீங்க என்று வெளிப்படையாகவே சொல்லுங்களேன். அதை விடுத்து தேர்தலைப் புறக்கணிக்குமாறு வேண்டுவது ஒரு முன்னால் தேர்தல் ஆணையருக்கு அழகா?