பிகேஆர்: நஜிப் 1எம்டிபி தவறுகளை ஒப்புக்கொண்டது ஏன்?

பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   1எம்டிபி-இல்  சில    தவறுகள்   நிகழ்ந்திருப்பதை   ஒப்புக்கொண்டது   பிகேஆர்  தலைமைச்   செயலாளர்    சைபுடின்   நசுத்தியோன்   இஸ்மாயிலுக்கு    சந்தேகங்களைக்  கிளப்பியுள்ளது.

அவர்  அதை  ஒப்புக்கொண்ட   நேரம்தான்  அதன்  பின்னே   மறைமுகமான  நோக்கங்கள்  இருக்குமோ  என்று  சைபுடினை  ஐயுற   வைத்துள்ளது.

“அவருக்கு   அதில்   சம்பந்தமில்லை    எனக்  காண்பிக்க  முயல்கிறாரா,  அதை    மக்களை  நம்ப  வைக்கப்   பார்க்கிறாரா?

“மறைமுக   நோக்கம்    எதுவும்   இருக்கிறதா?  பழி    போடுவதற்கு    ஒரு  பலிகடா   கிடைத்து  விட்டாரா?   அப்படிக்   கிடைத்துவிட்டால்   நாட்டின்  மிகப்  பெரிய  ஊழலிலிருந்து  இவர்   தப்பித்துக்கொள்ளலாமே”,  என  சைபுடின்  இன்று   ஓர்   அறிக்கையில்    கூறினார்.

செவ்வாய்க்கிழமை  ஒரு  நிகழ்வில்   பேசிய   நஜிப்,   1எம்டிபி  “தவறுகள்  நிகழ்ந்தது”   உண்மைதான்    என்றும்   அதனால்தான்   அது  குறித்து   விரிவான  விசாரணைக்கு   உத்தரவிட்டதாகவும்  கூறியிருந்தார்.