’14-வது பொதுத் தேர்தலில் ஓட்டு போடாதீர்கள்’ மற்றும் ‘வாக்குகளைச் சேதமாக்குங்கள்’ பிரச்சாரங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாத, எதிர்க்கட்சி வாக்காளர்களின் சமூக தளங்களில் மட்டுமே வலம் வருகிறது.
பாரிசான் நேசனல் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதை உறுதி செய்ய, பிஎன் ஆதரவாளர்கள், 14-வது பொதுத் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டு போடுவார்கள் எனப் பிரதமர் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் கூறினார்.
“ஓட்டுப் போட விரும்பாதவர்கள் பிஎன் ஆதரவாளர்கள் அல்ல, காரணம் அவர்கள் பிஎன் தொடர்ந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் வாக்களிக்க வருவார்கள்.
“எதிர்க்கட்சி மீது ஏமாற்றம் அடைந்த, அவர்களின் ஆதரவாளர்களே வாக்களிக்க வர விரும்பவில்லை. எனக்கு, அவர்கள் வாக்களிக்க வரவேண்டும், பிஎன் –னுக்கு வாக்களிக்க,” என்று அவர், இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அண்மையில், ஊடக மாநாடு ஒன்றில், பெர்சத்து தலைவர், டாக்டர் மகாதிர் முகமட், அப்பிரச்சாரத்திற்குப் பின்னால், அம்னோ உள்ளது என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
முன்னதாக, ‘#உண்டிரோசாக்’ அல்லது ‘#ஸ்போய்ல்வோட்’ மற்றும் #புரோட்டெஸ்பிஆர்யு ’ போன்ற செய்திகளைப் பரப்புகின்ற ஒரு தேர்தல் எதிர்ப்பு பிரச்சாரம் சமூகத் தளங்களில் பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.