எம்ஏசிசி எம்.ஆர்.எஸ்.எம். துணை முதல்வரைத் தடுத்து வைத்தது

மாரா கல்லூரியில் (எம்.ஆர்.எஸ்.எம்) மாணவர்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), அக்கல்லூரியின்  துணை முதல்வரைக் கைது செய்தது.

அவரோடு, அவரின் 24 வயது மகனும் நிறுவனம் ஒன்றின் 40 வயது உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும், இன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

துணை முதல்வரான அப்பெண்மணி, ரிம 79,000 மதிப்புள்ள ஒப்பந்தத்தை நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் ஒருவருக்குக் கொடுத்ததில், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

தனது நண்பரின் நிறுவனம் ஒன்றின் வழி, 2016 – 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அவர் தன் மகனுக்கு அக்குத்தகையைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அம்மூவரும் செக்‌ஷன் 23 சட்டம் எம்ஏசிசி 2009 கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.