கடந்த செப்டம்பரில் நடைபெற்ற “நச்சு அரசியலு”க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி தொடர்பில் போலீசார் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் துணைவியார் சித்தி ஹஸ்மாவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர்.
சித்தி ஹஸ்மா,91, அவரின் கணவருடனும் மகள் மரினாவுடனும் காலை மணி சுமார் ஒன்பதுக்கு யயாசான் அல்-புஹாரிக்கு வந்தார்.
இரண்டு போலீஸ் அதிகாரிகள் 11.30க்கு வந்தனர்.
அப்பேரணியில் சித்தி ஹஸ்மா மகளிருக்கு எதிரான வன்செயல்கள் குறித்து பேசினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் அவரின் முன்னிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட் தியோ கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் பற்றியும் சித்தி ஹஸ்மா கருத்துரைத்தார்.
“கடந்த காலத்தில் பொது நிகழ்வு ஒன்றில் யாரையும் இப்படி எளிதாக அறைந்து விட முடியாது”, என்றார்.
கலந்துரையாடல் அங்கத்தின்போது நஜிப்பிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் என்று தியோவை மாட் ஓவர் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் நடிகர் சுலைமான் யாசின் அறைந்து விட்டார்.