பொய்யான செய்திகளைக் கட்டுப்படுத்த புதுச் சட்டங்கள்- சாலே

பெருகிவரும்   பொய்யான   செய்திகளை   ஒடுக்க  புதுச்  சட்டங்கள்  கொண்டுவருவது   குறித்து   அரசாங்கம்   ஆலோசித்து   வருகிறது.

உலக  அளவில்  பெரும்   பிரச்னையாக   விளங்கும்   பொய்யான  செய்திகளைச்   சமாளிக்க    இப்போதுள்ள   சட்டங்கள்   போதுமானவை   அல்ல  என்று   தொடர்பு,    பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்   கூறியதாக  த   ஸ்டார்  மேற்கோள்    காட்டியுள்ளது.

“பொய்யான    செய்திகள்   என்பவை    ஒரு  மனிதரின்  பேரைக்   கெடுக்கும்   செய்திகள்   மட்டுமல்ல,    சில  நாடுகள்   அவற்றைத்   தேசியப்  பாதுகாப்புக்கே   ஆபத்தானவை   எனக்   கருதுகின்றன.  அதனால்,   பொருத்தமான   சட்டங்கள்  கொண்டு  வருவது   பற்றியும்  நாட்டின்  பாதுகாப்புக்கு   ஆபத்தை  விளைவிக்கக்கூடிய  பொய்யான  செய்திகள்  என்னும்  பிரச்னையைக் கையாள   மற்ற  நாடுகள்   பயன்படுத்தும்   முறைகளைப்   பின்பற்றுவது   குறித்தும்   ஆலோசித்து   வருகிறோம்”,  என்றவர்   சொன்னார்.

பிரிட்டன்  தேசிய  பாதுகாப்புத்   தொடர்புப்  பிரிவு  ஒன்றை  அமைக்கும்  முயற்சியில்   ஈடுபட்டிருப்பதை    அவர்   சுட்டிக்  காட்டினார்.