தெங்கு ரசாலி: பல்முனைப் போட்டி என்றால் ஆதாயம் பெறப்போவது பிஎன்தான்

14வது  பொதுத்    தேர்தலில்   பல    கட்சிகள்   போட்டியிட்டால்   அது  பிஎன்னுக்குதான்    சாதகமாக   அமையும்    என்றார்   குவா  மூசாங்   எம்பி   தெங்கு   ரசாலி    ஹம்சா.

பல  கட்சிகள்   போட்டியிடுவதால்  வாக்குகள்   சிதறும்  என்றாரவர்.

“மக்களில்   பெரும்பாலோரது   ஆதரவு   எங்களுக்கு  இருப்பதை   முந்திய   பொதுத்    தேர்தல்களில்   நிரூபித்திருக்கிறோம்.  பிஎன்   தொடர்ந்து  மக்களின்  ஆதரவைப்  பெற்றிருக்கும்   என்ற  நம்பிக்கை   எனக்குண்டு”,  என்றாரவர்.

14வது   பொதுத்   தேர்தலில்  பிஎன்  வெற்றி  பெறுவதில்   பிரச்னை  இருக்கும்  என  தெங்கு  ரசாலி   நினைக்கவில்லை.

எதிரணியினர்  தனிப்பட்டவர்கள்மீது  தாக்குதல்   நடத்துவது   குறிப்பாக  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்மீது   தாக்குதல்  நடத்துவது  குறித்துக்   கருத்துரைத்த    தெங்கு   ரசாலி,     அரசியல்   தலைவர்கள்  மக்கள்  விவகாரங்களை  வைத்துதான்   போராட    வேண்டுமே   தவிர,    தனிப்பட்ட  விவகாரங்களை  வைத்து  அல்ல   என்றார்.  அது  அரசியல்   நெறிமுறைக்குப்  புரம்பானது.