அதிகாரிகளே, சித்தி ஹஸ்மாவுக்குத் தொல்லை கொடுக்காதீர், தெங்கு ரசாஸி கூறுகிறார்

 

முன்னாள் பிரதமர் மகாதிரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலிக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று அரசாங்க அதிகாரிகளை குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டார்.

வேண்டுமென்றால், மகாதிரை விரட்டிப் பிடியுங்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் கடுமையாக நடந்துகொள்வதால் நன்மை ஏதும் இல்லை…சித்தி ஹஸ்மாவை பின்தொடர்வதாலும் கூட என்று அவர் கூறினார்.

இது சரியானதென்று நான் நினைக்கவில்லை என்று கூறிய தெங்கு ரசாலி, இது இன்னும் அதிகமான வெறுக்கத்தக்க கதைகளை உற்பத்தி செய்யும், ஆளுங்கட்சிக்கு இழப்பை ஏற்படுத்தும். இதனால் எவருக்கும் பலன் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று ஷா அலாமில் இன்று ஜி25 குழுவினர் ஏற்பாடு செய்திருந்த “முன்னேறுகிற மலேசியாவுக்கான சீர்திருத்தங்கள்” என்ற பொதுக் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெங்கு ரசாலி கூறினார்.

போலீசார் நேற்று 91 வயதான சித்தி ஹஸ்மாவை அவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற “நச்சு அரசியல்” எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டது குறித்து விசாரணை செய்தனர்.