பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் வடக்கு ஜோகூரில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
“அவர் நாடாளுமன்றத்துக்குத்தான் போட்டியிடுவார், சட்டமன்றஹ்துக்கு அல்ல”, என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
சைட் சாதிக்கைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார்.
வடக்கு ஜோகூரில் பெர்சத்துவுக்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, பாகோவும் மூவாரும். கட்சித் தலைவர் முகைதின் யாசின் ஏழு தவணைகள் பாகோ எம்பியாக இருப்பவர். எனவே, பாகோவில் அவர்தான் போட்டியிடுவார். அவர் அங்கு போட்டியிட்டால் சைட் சாதிக் மூவாரில்தான் களமிறங்க வேண்டியிருக்கும்.
சைட் சாதிக்குக்குத் தான் பிறந்த இடமான பூலாயில்தான் போட்டியிட விருப்பம். ஆனால், அது அமனா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப்புக்குக் கொடுக்கப்பட்டு விட்டது.