ஐரோப்பிய ஒன்றியம் 2020க்குள் செம்பனை எண்ணெய்க்குத் தடை விதிக்க உத்தேசித்திருப்பதால் அந்த ஒன்றிய நாடுகளின் பொருள்களைக் கொள்முதல் செய்வதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகிறது என அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்து முடிவெடுக்கப்பட்டது என்றாரவர்.
“நாம் ஒரு நாட்டின் பொருள்களை வாங்கும்போது அந்த நாடு நம்முடைய செம்பனை எண்ணெயைப் புறக்கணிக்க முனையுமானால் நாமும் அந்நாட்டிடம் பொருள் வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான் என்று துணைப் பிரதமர் நேற்று பாகான் டத்தோவில் கூறினார்.