போலீஸ்: இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் இன்னும் மலேசியாவில்தான் இருக்கிறார்

 

ஒருதலைப்பட்சமான மதமாற்ற வழக்கில் ஒன்பது ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி பெற்ற இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரித்வான் அப்துல்லா இன்னும் மலேசியாவில் இருப்பதாக போலீஸ் நம்புகிறது.

நேற்று, பெடரல் நீதிமன்றம் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதமாற்ற சான்றிதழை இரத்து செய்தது.

குடிநுழைவுத்துறையுடன் உறுத்திப்படுத்திக் கொண்ட பிறகு, முகமட் ரித்வான் இன்னும் நாட்டில் எங்கோ இருப்பதாக போலீஸ் முடிவு செய்துள்ளது என்று ஐஜிபி முகமட் பூஸி ஹருண் இன்று ஒரு போலீஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகக் கூட்டத்தில் கூறினார்.

குறிப்பிட்ட தகவல் இல்லை என்றாலும்…போலீஸ் படையிலுள்ள அனைத்து தரப்பினருக்கும், சிஐடி உட்பட, அந்த மனிதரை கண்டுபிடிக்க நன்கு வரையறுக்கப்பட்ட கட்டளைகளை விடுத்துள்ளேன் என்று கூறிய பூஸி, இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட தகவல் பொதுமக்களிடம் இருந்தால் அதை போலீசுக்கு கொடுத்து உதவும்படி அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளை – இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் – இப்போது 20, 19 மற்றும் 9 வயதாகியுள்ளனர் – ரித்வான் ஏப்ரல் 2009 இல் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்தார்.

2010 இல், ஈப்போ உயர்நீதிமற்றம் குழந்தைகளின் பராமரிப்பை இந்திரா காந்திக்கு அளித்ததோடு குழந்தை பிரசான டிக்சாவை தாயிடம் ஒப்படைக்கும்படி ரித்வானுக்கு உத்தரவிட்டது.

2016 இல், பெடரல் உச்சநீதிமன்றம் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ரித்வானை கைது செய்யும்படி போலீஸ் படைத் தலைவருக்கு (ஐஜிபி) உத்தரவிட்டது.