வரவிருக்கும் ‘பெரு நாளில்’, பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திலான பாரிசான் நேசனல் (பி.என்.) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘பெரு நாள்’ என்று 14-வது பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பேசிய அவர், பழையக் கதைகளை மறந்து, தற்போது அரசாங்கம் காட்டிவரும் அர்ப்பணிப்பைக் கருதி, இந்தியர்கள் பாரிசானுக்கு ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
“பழையக் கதைகளை நாம் மறைத்து வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய சமூகம் பழையப் புத்தகத்தை மூடவேண்டும்.
“ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை, உடன்பாடற்ற கருத்துகளை நாம் மறந்துவிட வேண்டும்,” என்று அவர் இன்று, பத்துமலை தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட போது கூறினார்.
முன்னதாக, பத்துமலைக் கோயிலுக்கு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட RM25 மில்லியனிலிருந்து, கூடுதலாக RM2 மில்லியன் ஒதுக்கீட்டையும் ஷாஹிட் அறிவித்தார்.
பத்துமலை கோவிலில் ஒரு கலாச்சார வளாகத்தை அமைப்பதற்காக, அந்தக் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்தியச் சமூகத்திற்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை நஜிப் செய்கிறார் என்றும் அவர் சொன்னார்.
எனவே, இன்னும் அதிக ஆதரவைப் பெற, நஜிப்பின் தலைமைக்கு வலுவான ஆதரவை வழங்குமாறு அவர் இந்தியர்களைக் கேட்டுக்கொண்டார்.
“இதனை நீங்கள் செய்தால், அரசாங்கம் தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்றும்; எதிர்காலத்தில் இந்தியச் சமூகம் இன்னும் கூடுதலான உதவிகளைப் பெற ஆவன செய்வதை உறுதிபடுத்துமாறும் நான் பிரதமரிடம் இரகசியமாக கூறுவேன்,” என்றார், உள்துறை அமைச்சருமான ஷாஹிட் ஹமிடி.
#பழையக் கதைகளை மறந்து, தற்போது அரசாங்கம் காட்டிவரும் அர்ப்பணிப்பைக் கருதி, இந்தியர்கள் பாரிசானுக்கு ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.#
பழைய கதைகளை மறந்து கூட்டுக் களவாணிகளுடன் உடன் சேர்ந்து இந்தியர் மானமிழக்க வேண்டுகின்றார் மான்புமிகு மந்திரியார்!
இந்தியரை தமிழர், தெலுங்கர், மலையாளிகள், சீக்கியர் என பிரித்து விட்டு இப்பொழுது இந்தியர் ஓட்டு வேண்டுமென்பது வெறும் கண்துடைப்பு. பாவம் ஏதும் அறியா பாமரத் தமிழரை பணையம் வைத்து விளையாடுகின்றார் ம.இ.க. வினரும் பி.பி.பி மற்றும் ஐ.பி.எப் கட்சியினரும்.
pohi pandighai endra ninaippu….!
பழைய கதையை { வரலாறு } எல்லாம் மாத்தி புதிய கதையை சொல்லி நடிக்கின்றீர்கள் இதில் எந்த கதையை மறக்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை ஆளும் அம்னோ அரசாங்கம் இந்திய சமூகத்தை புறக்கணித்து வருவதையும் ! இந்திய சமூகத்தை இழிவு படுத்திவருவதையும் மறந்து விடச்சொல்கிறார்களா?! இந்திய சமுதாயம் பிளவு பட்டு கிடப்பதற்க்கு அரசாங்கமோ அம்னோ தலைவர்களோ காரணம் கிடையாது ! நாமெல்லாம் நண்டு இனம் ! நம்மிடையே பெருகி கிடக்கும் வீர வசனம் பேசி வெட்டி கதை பேசி திரியும் நமது உருப்படாத மழையில் பூத்த இந்த காளான் தலைவர்கள் ! அடுத்த இனத்தவன் சொன்னானா நம்மை ஜாதி சங்கம் வைக்க சொல்லி ! இந்த மானம் கேட்ட தமிழன் ஜாதி சங்கம் வைத்தால் அரசாங்கம் என்ன செய்யும் ! முப்பது ஆண்டு காலம் நம் சமுதாயம் கள்ளர்கள் கையிலும் ! கள்வர்கள் கையிலும் சிக்கி சின்னாபின்னமாகி ! சிதறுண்டு போனதால் ஏற்பட்ட சாபம் ! பறையன் சங்கமும் ! கவுண்டன் சங்கமும் ! அந்நியன் ஓ வன்னியனோ இந்த சங்கம் எல்லாம் மகாதிரும் ! நஜிப்பும் மா வைக்க சொன்னார்கள் ! அவன் மதத்தால் ஒன்று பட்டு ஓரினமாக சிறப்புடன் வாழ்கிறான் ! கல் தோன்றி ,மண் தொன்றா காலத்தில் தோன்றிய இந்த காட்டு மிராண்டி குடி ஆயிரம் ஆனாலும் உருப்படாது !!
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆராதே நாவினால் சுட்ட வடு” என்ற நம் தமிழ் மறையில் இடம்பெற்றுள்ள குறளை நாம் நினவு கொள்வது சிறப்பு. இனி நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.மலாய் இனம் தற்பொழுது சிதறிக் கிடக்கின்றது. நம் இனம் நாட்டின் சனத்தொகையில் 7 விழுக்காடு கொண்ட சிறுபாண்மையினர்.பெரும்பாண்மையினரை தேடி போகலாமே? மறப்பது என்பது மலாக்காரகளின் தன்மை. இந்நாட்டை வளப்படுத்திய நம்மை மறந்தார்கள்.நம் வாழ்க்கை நிலை மறந்தார்கள். நம் பொருளாதாரம்,கல்வி நிலை பற்றி மறந்தார்கள். அரசாங்கத்தில் நம் வேலை வாப்புகள் பற்றி மறந்தார்கள். இன்னும் எத்தனையோ இவர்கள் மறந்தார்கள். ஆனால் தேர்தல் காலத்தில் நம்மை நாடி ஓட்டு பிச்சை எடுப்பது மட்டும் இவர்கள் மறக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் நம்மை மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் இவர்கள் நமக்கு இழைத்த துன்பங்களையும் கிடுமைகளையும் மறக்க முடியுமா??????