நாடாளுமன்றம் இன்று பொய்ச் செய்தி தடை மசோதா 2018 ஐ ஏற்றுக்கொண்டது. அதற்கு ஆதரவாக 123 வாக்களும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எதிர்க்கட்சி தரப்பிலும் அதற்கு ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்றத்திலிருந்த 11 பாஸ் உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் நசருடின் ஹசான் ஆகியோர் வாக்கெடுக்கப்படும் போது அவையில் இல்லை.
அங்கிருந்த இரு சுயேட்சை உறுப்பினர்களில் சிம் தோங் ஹின் (மலாக்கா) மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார். சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற குழுவினர், பிஎஸ்எம் மற்றும் வாரிசான் எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
இச்செய்தி பதிவு செய்யப்படும் நேரத்தில், பக்கத்தான் ஹரப்பானின் எம்பிகளில் யார் யார் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதை மலேசியாகினியால் உறுதி செய்ய முடியவில்லை. இருந்த போதிலும், டிஎபியின் அரிப் அப்துல் சாப்ரி அப்துல் அசிஸ் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். இன்னும் நான்கு டிஎபி உறுப்பினர்கள் மக்களவைத் தலைவரால் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமெல்லாம் பொய் பேசுபவர்கள்- அரசுஅரசியல்வாதிகளும் அவன்களின் அடிவருடிகளும் மாபெரும் நியாயவாதிகள்-அரிச்சந்திரன்கள்- காலத்தின் கோலமும் சித்திக்க தெரியாத மாக்களும்
PAS கட்சி இந்த முறை KELANTAN மற்றும் TERENGGANU ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பெரும்பான்மையை இழக்கும் ! இதில் தப்பித்து ஆட்சி அமைத்து விடடாள் , நான் ஒத்துக்கொள்கிறேன் அவர்களின் அரசியல், சாணக்யமானது என்று ! காரணம் PAS சில் இருக்கும் பகுத்தறிவாதிகள் AMANAH என்று முழங்கியது ஒரு சிலரையாவது பிரித்தெடுக்கும் ! வளர்ச்சியை மையப்படுத்தி செல்லும் BN , வளர்ச்சியை ECLR அண்ட் HIGHWAY விரும்புவர்களை ஈர்க்கும் ! PKR : GST ஒழிப்பு மற்றும் ஜனநாயக மருமர்ச்சியை முன்னெடுப்பதால் , ஏழைகளையும் ஆளும் அரசாங்கத்தில் மாற்றம் விரும்புவர்களையும் , அரசாங்க ஊழியர்களை பார்த்து பொறாமை படும் நண்பர்களையும் தன் பக்கம் இழுக்கும் ! DAP மற்றும் MCA வுக்கு அந்த இரண்டு மாநிலங்களிலும் வேலை இல்லை ! மா இ கா , கழிப்பறையின் முன் அமர்ந்து கொண்டு “SATU KALI MASUK LIMA PULUH SEN BANG ” என்று தன் வேலையை வெட்கப்படாமல் செய்யும் ! அந்தக்காலத்தில் ஒரு முறை சாமி வேலு சொன்னார் . LUNAS சடட மன்றத்தை வெள்ளாமல் திரும்பி வர மாட்டொம் என்று . தோற்று விட்டு வெட்கப்படாமல் வந்தார் தானை தலைவர் !