முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பணம் தொடர்பில் போலீஸ் முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் என்கிறார் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் பூசி ஹருன்.
அது கட்சிப் பணம் என்றும் அதைக் கட்சியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அம்னோ கோரிக்கை விடுத்திருப்பது பற்றிக் கேட்டதற்கு பூசி அவ்வாறு கூறினார்.
“பணத்தைத் திரும்பப் பெற சில நடைமுறைகள் உள்ளன. சட்டப்படியான அந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
“விசாரணை நடைபெறுகிறது. அது முடிவதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம்”, என்றாரவர்.
அம்னோ நேற்று, அது பிரதமர் நஜிப் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து புதிய தலைமையிடம் ஒப்படைக்கப்படவிருந்த பணம் என்று கூறியிருந்தது.
நஜிப்பும் அது தேர்தலுக்காகக் கொடுக்கப்பட்ட நன்கொடைப் பணம் என்றும் போலீசார் அதை எடுத்துச் சென்றது குறித்து போலீஸ் புகார் செய்திருப்பதாகவும் கூறியதாக மலாய் மெயில் முன்பு அறிவித்திருந்தது.
Dont give a single penny to this liers who rob the nations money. Send them to prison.