ஜோகூர் எதிரணித் தலைவர் ஹஸ்னி முகம்மட், பக்கத்தான் அரசாங்கம் கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டத்தை ஒரேயடியாக இரத்துச் செய்துவிடாமல் ஒத்திவைத்திருப்பது ஒரு சரியான முடிவு என்கிறார்.
அதுவே சரியான முடிவு ஏனென்றால் உள்ளூர் இரயில் தொழிலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு திட்டம் அது என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அதிவிரைவு இரயில் மலேசியாவுக்கு ஒரு புதுமை. அது பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என்றவர் சொன்னார்.
நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , ஜப்பானுக்கான மூன்று-நாள் அலுவல் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்குமுன் செய்தியாளர்களிடம் பேசியபோது முந்தைய பிஎன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அத்திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை என்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.