குடும்பத் தலைவிகளுக்கு இபிஎப் திட்டம்: ஆகஸ்ட் 15-இல் தொடக்கம்

புத்ரா  ஜெயா அதன்   கட்டாய   பணி ஓய்வுச்  சேமிப்புத்   திட்டத்தை    வீட்டைக்  கவனித்துக்கொள்ளும்  குடும்பத்  தலைவிகளுக்கும்  விரிவுபடுத்தியுள்ளது. அவர்களுக்காக  Caruman Sukarela Insentif Suri (ஐ-சூரி)  என்ற  திட்டம்   தொடங்கப்பட்டுள்ளது.

அத்திட்டம்    ஆகஸ்ட்  15  தொடங்கி   மூன்று   கட்டங்களில்   அமல்படுத்தப்படும்   என்று   துணைப்  பிரதமரும்    மகளிர்,   விவகார   மற்றும்  நலவளர்ச்சி   அமைச்சருமான   டாக்டர்   வான்  அசிசா   வான்   இஸ்மாயில்   கூறினார்.

முதல்  கட்டத்தில்   திட்ட   உறுப்பினர்கள்  குறைந்தபட்ச   பங்களிப்பாக   மாதம்  ரி5  ரிங்கிட்   செலுத்தி   அவர்களின்  கணக்கைத்   தொடங்க   வேண்டும்.  அரசாங்கம்   அதன்   பங்குக்கு   மாதம்  40 ரிங்கிட்டை   அவர்களின்  கணக்கில்   சேர்க்கும்.

அதை   அடுத்து  அரசாங்கம்  மேலும்  ஒரு 10 ரிங்கிட்டை   சமூகப்  பாதுகாப்பு   நிறுவனத்துக்காக (சொக்சோ)    அவர்களின்  கணக்கில்   சேர்ப்பிக்கும்.  இந்த  இரண்டாம்  கட்டம்   அடுத்த   ஆண்டு  முற்பகுதியில்   தொடங்கும்.

இறுதிக்  கட்டத்தில்  கணவரின்  இபிஎப்   சந்தாவிலிருந்து   இரண்டு  விழுக்காடு   மனைவியின்  கணக்கில்   சேர்க்கப்படும்.  அது  2020-இல்   நடைமுறைக்கு   வரும்.