பிரதமர் மகாதிர் நாளை சீனா செல்கிறார்

 

இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு, மகாதிர் அவரது முதலாவது அதிகாரப்பூர்வமான சீன வருகையை நாளை மேற்கொள்கிறார்.

அவருடன் ஆறு அமைச்சர்களும் பேராக் மந்திரி பெசார் அஹமட் பைசால் அஸுமுவும் செல்கின்றனர்.

சீனப் பிரதமர் லை கெகியாங் விடுத்த அழைபபைத் தொடர்ந்து இந்த வருகை வேற்கொள்ளப்படுகிறது என்று விஸ்மா புத்ரா கூறுகிறது.

பிரதமர் என்ற முறையில் சீனாவுக்கு இது மகாதிரின் எட்டாவது அதிகாரப்பூர்மான வருகையாகும். மீண்டும் பிரதமரான பின்னர் இது முதலாவது வருகையாகும்.

சீனா மற்றும் மலேசியாவுக்கிடையிலான உறவுகளில் இந்த வருகை ஒரு புதிய மைக்கல்லாகும் என்று புத்ரா ஜெயா மேலும் கூறுகிறது.

மலேசியாவும் சீனாவும் தொடர்ந்து அவற்றுக்கிடையிலான நெருங்கிய மற்றும் விசாலமான இரு தரப்பு உறவுகளை நிலைநிறுத்தும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் சீனா மலேசியாவின் உயர்ந்த வர்த்தகப் பங்காளியாக இருந்து வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தின் மதிப்பு ரிம290..65 பில்லியன் என்று விஸ்மா புத்ரா மேலும் கூறியது.

பிரதமர் மகாதிருடன் செல்லும் அமைச்சர்கள்: சைபுடின் அப்துல்லா, தெரசா கோ, டாரெல் லெய்கிங், சலாகுடின் அயுப், லியு வுஇ கியோங் மற்றும் முகமட் ரிட்ஸுவான் முகமட் யுசுப்.