பிஎன் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற மேளவை, தேவான் நெகாரா, எதிர்பாராத நிலையில் விற்பனைகள் வரி மசோதா 2018-ஐ ஏற்றுக் கொண்டுள்ளது. இது திரும்பி வரும் விற்பணைகள் மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) சார்ந்த ஐந்து மசோதாக்களில் ஒன்றாகும்.
இந்த மசோதா குரல் ஒலி வாக்குகள் வழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்ட இந்த மசோதாவை மேளவையில் எந்த எம்பிகளாவது எதிர்த்தார்களா என்பது தெரியவில்லை.
தற்போது, 55 உறுப்பினர்களைக் கொண்ட தேவான் நெகாராவில் 32 பிஎன் மற்றும் 3 பாஸ் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அரசாங்கம் இன்னும் நான்கு இதர மசோதாக்களுக்கு செனட்டின் ஒப்புதலைத் பெற முயற்சிகள் மேற்கொள்ளும்.
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் எஸ்எஸ்டியை செப்டெம்பர் 1 அளவில் மீண்டும் உபயோகத்திற்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.