திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை பற்றிய நிதி அமைச்சரின் வாக்குமூலத்தைப் போலீஸ் பதிவு செய்தது

 

மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை காணாமல் போய் விட்டது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் விடுத்திருந்த அறிக்கை மீது போலீஸ் இன்று அவரது வாக்குமூலத்தைப் போலீஸ் பதிவு செய்தது.

தண்டனை சட்டத் தொகுப்பு (பீனல் கோட்) செக்சன் 409 இன் கீழ் போலீஸ் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததை குவான் எங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் பொறுப்பிலிருந்த திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையில் ரிம19.25 பில்லியன் பற்றாக்குறை இருப்பதாக குவான் எங் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அடுத்த வருட தொடக்கத்திலிருந்து ஜிஎஸ்டி திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும். இப்பணம் அரசாங்கத்திற்கு சொந்தமானதல்ல, மக்களுக்குச் சொந்தமானது என்று குவான் எங் மேலும் கூறினார்.

இப்பற்றாக்குறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நஜிப் ரசாக் பதில் கூற வேண்டும் என்றாரவர்.