தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம்(டெல்கோ) முன்கட்டணம் செலுத்திப் பெறப்படும் அட்டைகளுக்குச் சேவை வரி விதிக்கப்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
டெல்கோ-கள் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி)க்கு மாறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என அமைச்சு கூறியது.
சேவை வரி(எஸ்எஸ்டி) 2018 பிரிவு 34(3) (அ)-இன்கீழ் முன்கட்டணம் செலுத்திப் பெறப்படும் அட்டைகளுக்கு வழங்கப்படும் இந்த வரி விலக்கு நாளை, செப்டம்பர் 6-இலிருந்து அமலுக்கு வருவதாக அமைச்சு விளக்கியது.