அதிகாரப்பூர்வமானதல்ல: டிஎபியின் கையில் பலாக்கோங்

 

மாலை மணி 6.50 அளவில், அதிகாரப்பூர்வமற்ற முடிவுப்படி பலாக்கோங் இடைத் தேர்தலில் டிஎபி வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

அந்த நேரம் வரையில், டிஎபி 15,000-க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. அது வாக்களிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள வாக்குகளில் பாதிக்கு மேலானாதாகும்.

மசீச 2,000 -க்கும் சற்று கூடுதலான வாக்குளைப் பெற்றுள்ளது. அது தனது வைப்புத் தொகையை இழக்காமல் இருப்பதற்கு 3,468 வாக்குகளுக்குக் கூடுதலாகப் பெற வேண்டும்.