பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரிம1.50ஆகக் குறைக்க அரசாங்கம் என்ணவில்லை என நிதி துணை அமைச்சர் அமிருடின் ஹம்சா இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஒரு வேளை கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்குச் சரிந்தால் பெட்ரோல் விலையும் குறையலாம் என்றாரவர் .
மேலும், பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் அப்படி (பெட்ரோல் விலையை ரிம1.50ஆகக் குறைக்க) ஒரு திட்டம் இருப்பதாகக் குறிப்பிடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலவையில், செனட்டர் இங் சியாங் சின் கேட்டிருந்த வாய்மொழிக் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அமிருடின் இவ்வாறு கூறினார்.