தேவான் நெகாரா போலியான செய்தி எதிர்ப்பு சட்ட இரத்து மசோதாவை நிராகரித்தது

 

இன்று தேவான் நெகாரா போலியான செய்தி எதிர்ப்பு சட்டம் 2018-ஐ இரத்து செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை தள்ளுபடி செய்தது.

அந்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டது.

அந்த மசோதாவுக்கு ஆதரவாக 28 செனட்டர்களும் எதிராக 21 செனட்டர்களும் வாக்களித்தனர். இதில் மூவர் பங்கேற்கவில்லை.