ஹனிபா: 1எம்டிபி விவகாரத்தில் எல்லாரும் மாசற்றவர் என்றால் யார்தான் குற்றவாளி?

1எம்டிபி விவகாரத்தில் தான் குற்றமே செய்யாத அப்பாவி என்று தொழிலதிபர் ஜோ லோ கூறிக்கொண்டிருக்கும் வேளையில், எல்லாருமே   குற்றம்   செய்யவில்லை   என்றால்   குற்றவாளிகள் யார், மக்களா என்று கிண்டலிக்கிறார் சட்டத் துணை அமைச்சர் முகம்மட் ஹனிபா மைடின்.

ஜோ லோவின் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தில் அண்மையில் பதிவிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார்.

“அதில் லோ, ‘ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் மாசற்ற அப்பாவி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

“லோ-வைப் போலவே முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் 1எம்டிபி விவகாரத்தில் எந்தக் குற்றமும் செய்ததில்லை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 1எம்டிபி தொடர்பில் உங்களில் யாருமே குற்றமிழைக்கவில்லை போலும்.

“எனில், 14வது பொதுத் தேர்தலில் பிஎன்னை நிராகரித்த மக்களாகிய நாங்கள்தான் குற்றவாளிகள் என்பது உறுதியாகிறது . அப்படித்தானே”, என்று ஹனிபா தம் முகநூல் பக்கத்தில் நக்கலாகக் குறிப்பிட்டிருந்தார்.