அன்வார் : நாற்காலியைத் தூக்கி வீசியவரை, கட்சியிலிருந்து தூக்கி வீசுவோம்

மக்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டுமென, நாடளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கைக் கொண்ட சபா பிகேஆர் உறுப்பினர்களைப் பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

அக்கட்சி மேல் வர்க்கத்தினருக்கு மட்டுமல்ல, மாறாக மக்களுக்காகப் போராடும் , மக்கள் நலனைப் பாதுகாக்கும் ஒரு கட்சி என்பதைக் கட்சி உறுப்பினர்கள் உணர வேண்டும் என்றார் அவர்.

மக்களின் தலைவிதியைக் காப்பாற்றப் போராடும் தலைவர்களையே மக்கள் விரும்புகின்றனர் என்றும், தன்னை “வளமாக்கிக்” கொள்ளும் தலைவரை மக்கள்  ஆதரிப்பதில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.

அதேவேளை, கட்சியில் நிலைத்திருக்க விரும்பும் உறுப்பினர்கள் கட்சியின் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

“நாற்காலியைத் தூக்கி வீசியவரை, நாம் கட்சியிலிருந்து தூக்கி வீசுவோம். இது நமது முறை அல்ல. கட்சியில் இருக்க விரும்புபவர்கள் கட்சியின் விதிமுறையைப் பின்பற்றியே ஆகவேண்டும்,” என இன்று, சபா, தாவாவ் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

-பெர்னாமா