டானியல் செய்தியாளர் கூட்டமொன்றில் பதவி விலகலுக்கான காரணத்தை விளக்குவார்

போர்ட் டிக்சன் எம்பி பதவியிலிருந்து விலகிய டானியல் பாலகோபால் அப்துல்லா அப்பதவி விலகல் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டி விளக்கமளிப்பார்.

அக்கூட்டத்தில் அன்வார் இப்ராகிமும் கலந்துகொள்ளக்கூடும் என்றாரவர்.

“நான் இப்போது போர்ட் டிக்சன் எம்பி இல்லை என்றாலும் இன்னமும் போர்ட் டிக்சனில்தான் வசிக்கிறேன்.

“இங்கு பல வகைகளில் என்னுடைய பங்களிப்பைச் செய்ய முடியும்…….போர்ட் டிக்சனைவிட்டு வெளியேறப் போவதில்லை”, என்றவர் சொன்னார்.

அன்வார் இப்ராகிம் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்று எட்டாவது பிரதமராக பதவியேற்பதற்கு ஏதுவாக டானியல்,68, தன்னுடைய போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்தார்.

அவரது செயல்  பலராலும்   குறைகூறப்பட்டது. அத்தொகுதியைக் காலிசெய்ய அவர் அன்வார் இப்ராகிமிடம் ரிம25 மில்லியன் வாங்கினார் என்றுகூட    சொல்லப்படுகிறது.