வீட்டு விலையைக் குறைக்காவிட்டால் எஸ்எஸ்டி விலக்களிப்பு மறுபரிசீலனை செய்யப்படும்: லிம் எச்சரிக்கை

மேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைக்காவிட்டால் கட்டுமான பொருள்களுக்கும் சேவைகளுக்குமான விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி) விலக்களிப்பை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார்.

அரசாங்கம் வரியில் விலக்களித்து மேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றாரவர்.

“வீட்டு விலை குறைவதற்காகத்தான் எஸ்எஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் இதையும் சேர்த்து விலையைக் கூட்டினால் அது அர்த்தமற்றதாகிவிடும்” , என லிம் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.