2019 வரவு செலவு திட்டம் | நான்கு மில்லியன் கார் மற்றும் 2.6 மில்லியன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மானிய திட்டங்களை அரசாங்கம் விரைவில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோன் 95 பெட்ரோலுக்கு, மாதம் 30 சென் மானியம், 1.5cc கார் உரிமையாளர்களுக்கு 100 லிட்டருக்கும், 125cc மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு 40 லிட்டருக்கும் வழங்கப்படும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்த, அரசாங்கம் RM2 பில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் லிம் கூறினார்.