எதிர்வரும் சனிக்கிழமையன்று, அனைத்து வகையான இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாட்டிற்கு (ஐசெர்ட்) எதிரான பேரணியில், தனது ஆதரவாளர்களைக் கலந்துகொள்ளும்படி நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார்.
முஸ்லீம்களும் மலாய்க்காரர்களும் வெற்றிகரமாக இணையும் ஒரு பேரணி என்ற வரலாற்றை அது உருவாக்க வேண்டும் என்று அந்த முன்னாள் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
“வாருங்கள், நாம் டிசம்பர் 8-ம் தேதி ஒன்றிணைவோம்.
“பாதுகாப்பாகவும் விவேகமாகவும் ஒன்றுகூடுங்கள், ஆனால் ஒரு புகழ்பெற்ற உம்மா மாநாடு என அதைக் காட்டுங்கள்,” என்று இன்று காலை சமூக ஊடக பதிவொன்றில் அவர் கூறியுள்ளார்.
‘ஐசெர்ட்’டை ஏற்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை எதிர்த்து, அம்னோ மற்றும் பல அரசு சாரா அமைப்புக்களுடன் இணைந்து, பாஸ் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
இருப்பினும், கடந்த நவம்பர் 23-ம் தேதி, பிரதமர் மகாதிர், அரசாங்கம் ஐசெர்ட்-இல் கையெழுத்திடாது என்று அறிவித்துவிட்டார்.
நஜிப் அப்பேரணியில் கலந்துகொள்வாரா என்று தெரியவில்லை.