இருக்கை காலி என்ற நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக சிவராஜா வெளியேற்றப்பட்டார்

 

இன்று பின்னேரத்தில், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசுப் மஇகா உதவித் தலைவர் சி. சிவாராஜாவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கை பற்றிய மேல்முறையீடு நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் அது காலியாக இருக்கும் என்ற தேர்தல் நீதிமன்றத்தின் பிரகடனத்தைத் தள்ளி வைக்கும் உத்தரவை அந்நீதிமன்றம் வெளியிட்டுள்ளதா என்பது குறித்த விளக்கம் பெறும் வரையில் இவ்வுத்தரவு நிலுவையில் இருக்கும் என்றாரவர்.

ஆகவே, இடைப்பட்ட நேரத்தில். மன்றத்திலிருந்து வெளியேறுங்கள். வழக்குரைஞரின் கருத்தைப் பெற்று அதை மன்றத் தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள். இது முக்கியமானது, ஏனென்றால் இது எதிர்காலத்திற்கு ஒரு முன்னோடியாக அமைந்துவிடக் கூடாது என்று அரிப் கூறினார்.