1எம்டிபி அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்ததற்காக அருள் கந்தா மீது குற்றம் சாட்டப்படும்

1எம்டிபி மீதான அரசாங்க கணக்காய்வு அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்தார் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து 1எம்டிபியின் முன்னாள் தலைவர் அருள் கந்தா நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எம்எசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டார் என்ற கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜிப்பும் குற்றச்சாட்டப்படலாம் என்று மலேசியாகினி அறிந்துள்ளது.

சட்டவிரோதமான மாற்றங்களைச் செய்தார்கள் என்று கூறப்படும் அருள் கந்தாவும் நஜிப்பும் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஓர் எம்எசிசி அதிகாரி அவரது அடையாளத்தை வெளியிடக்கூட்டது என்ற நிபந்தனையோடு கூறினார்.

இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான தேதி துணை அரசாங்க வழக்குரைஞரைப் பொறுத்தது என்று அந்த வட்டாரம் கூறிற்று.