முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீது செசன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட 17 நாணயச் சலவை சம்பந்தப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை செசன்ஸ் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதைப் பதிவு செய்த செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி வழக்குகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றிவிட உத்தரவிட்டார். மேலும், வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அங்கு ஒப்படைக்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு ரோஸ்மா அவருடைய வழக்குரைஞர்கள் குழுவுடன் வந்திருந்தார். அரசு தரப்பை ஶ்ரீ ராம் கோபால் பிரதிநிதித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
நவம்பர் 29 இல், இவ்வழக்கு உயர்நீதிமற்றத்திற்கு மாற்றப்படுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி ஒப்புதல் அளித்தார்.