மக்கள் கூட்டத்தால் குழப்பம்

 

பிற்பகல் மணி 3.05 அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜாலான் ராஜாவுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. மயக்கமுற்ற பலருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.

அம்னோ, பாஸ் தலைவர்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் தலைவர்கள் வண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மேடையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மோட்டார் சைக்களில் வந்து சேர்ந்தார்.

இக்கட்டத்தில் டாத்தாரான் மெர்தேக்காவில் சுமார் 50,000 கூடியிருப்பதாக போலீஸ் மதிப்பிடுகிறது.

மக்களை அமைதியாக அமரும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர். ஒரு போலீஸ் ஹெலிகோப்டர் அப்போது அவ்விடத்தில் வட்டமிட்டுச் சென்றது.