இந்தப் பேரணியில் 500,000 பேர்கள் பங்கேற்றனர் என்று அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறிக் கொண்டார்.
அம்னோவும் பாஸும் அவற்றின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாத்திற்காகவும் மலாய்க்காரர்களின் உரிமைக்காகவும் போராட ஒன்றுகூட வேண்டும் என்று அவர் கூறினார்.
50,000 மக்கள்தான் கூடுவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால் நாம் இங்கு 500,000 மக்கள் இருப்பதைப் பார்க்கிறோம் என்று ஸாகிட் மேலும் கூறினார்.
இது இஸ்லாத்தின் மீது கை வைத்தால் நாம் உயிர்த்தெழுவோம் என்பதைக் காட்டுகிறது என்று கூறிய அவர், ஐசெர்ட்டை அங்கீகரிப்பது சாபா மற்றும் சரவாக் மக்களையும் பாதிக்கும் என்றார்.
முன்னாள் பிரதமர் நஜிப் இங்கு இருக்கிறார் என்று ஸாகிட் கூறியதும், கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இறுதியாக, மழைத் தூறல் தொடங்கியதுடன், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பேசினார்.
மனிதர்களைவிட மிருகங்களுக்கு அதிக மதிப்பளிக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதையும் ஐசெர்ட்டையும்விட சமுதாய ஒப்பந்தம் சிறந்தது என்று அவர் கூறினார்.
அவரது பேச்சுக்குப் பின்னர், பக்கத்தான் ஆட்சிக் காலத்தைச் சுருக்கக் கோரும் பிராத்தனை நடத்தப்பட்டது.
இத்துடன் பேரணி ஒரு முடிவிற்கு வந்தது. மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினர்.