பேரணிக்குப் பின்னர் கோலாலம்பூர் எப்படியிருக்கிறது?, மகாதிர் தானே சென்று பார்த்தார்

 

இன்று மாலை ஐசெர்ட்டிற்கு எதிரான பேரணி முடிவுற்ற பின்னர் பிரதமர் மகாதிர் கோலாலம்பூரை சுற்றிப் பார்த்தார். அவரது காரை அவரே ஓட்டிச் சென்றார்.

ஐசெர்ட் எதிர்ப்பு பேரணிக்குப் பின்னர் தலைநகரில் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதைத் தானே பார்த்து தெரிந்துகொள்வதற்காக மகாதிர் அவரது புரோட்டோன் காரில் சென்றார் என்று வலைத்தள பதிவாலர் பிர்டாவுஸ் அப்துல்லா டிவிட் செய்துள்ளார்.

பிரதமரின் அலுவலகத் தகவல்படி, பேரணிக்குப் பின்னர் மகாதிர் அவரது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு கோலாலம்பூரை சுற்றிப் பார்த்தார்.

இன்று முன்னேரத்தில், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதிர், இன்றைய பேரணிக்கு ஒரு மில்லியன் மக்கள் திரண்டிருப்பார்கள் என்று ஏளனமான மதிப்பீடு ஒன்றைச் செய்தார்.